ETV Bharat / sukhibhava

நகத்தைப் பார்த்து உடலில் உள்ள பிரச்சினையைக் கண்டுபிடிப்பது எப்படி? - nail types

நகங்களில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்துக்கும், உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும். பல வகையான நகங்களின் தொகுப்பை இக்கட்டுரையில் காண்போம்.

Nails
நகங்கள்
author img

By

Published : Mar 1, 2021, 6:36 PM IST

நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை கை, கால்களில் உள்ள நகங்களை வைத்தே எளிதாக அறிந்துகொள்ளலாம். நகங்களில் ஏற்படும் நிற மாற்றங்கள், பல்வேறு பாதிப்புகளுக்கான அறிகுறிகளாக அமைகின்றன. அதனால்தான், மருத்துவர்கள் பரிசோதனைக்குச் செல்கையில் நாக்கின் கீழ்புறத்தைப் பார்ப்பது மட்டுமின்றி நகங்களையும் பார்க்கின்றனர்.

எனவே, நகங்களில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது எனக் கூறப்படுகிறது. வெள்ளை நகங்கள், நீள நகங்கள், மஞ்சள் நகங்கள் என அனைத்தையும், கல்லீரல் நோய், நுரையீரல் பாதிப்பு, இதயம் போன்றவற்றுடன் தொடர்புப்படுத்தலாம். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

வெளிர் நகங்கள் (Pale Nails)

வெளிர் நகங்கள் ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, இதய செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற சில கடுமையான நோய்களுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும்

Pale Nails
வெளிர் நகங்கள்

மஞ்சள் நிற நகங்கள் (Yellow Nails)

நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு காரணம் புஞ்சை தொற்றுதான். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால், தொற்று பாதிப்பு மோசமடைந்து, நகங்கள் உடைந்துபோதல், தடினமாக மாறுதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

தரம் இல்லாத நெயில் பாலிஷ் உபயோகித்தாலும், இத்தகைய பிரச்சினை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. நகங்கள் உடைந்துபோதல், தடினமாக மாறுதல், சொரியாஸிஸ் போன்ற பல்வேறு தொந்தரவுகள் ஏற்படலாம்.

Yellow Nails
மஞ்சள் நிற நகங்கள்

விரிசல் நகங்கள் (Split or Cracked Nails)

நகங்கள் எளிதில் காயமடைந்தால், ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆய்வு முடிவுகள், இதனை தைராய்டு நோயுடன் குறிக்கிறது. அதுவே உடைந்துபோய் மஞ்சள் நிறத்துடன் நகங்கள் தென்பட்டால் பூஞ்சை தொற்றின் அறிகுறியாகும்.

Split or Cracked Nails
விரிசல் நகங்கள்

வீங்கிய நகங்கள் (Puffy Nail Folds)

நகங்களைச் சுற்றியுள்ள தோல் சிவந்து வீங்கிப்போய் காணப்படும். இதனைத்தான், நகச்சுத்தி எனக் கூறுகின்றனர். இந்தப் பாதிப்புக்குத் தொற்று காரணமாக இருக்கலாம். அதேபோல், திசுக்கோளாறும் இருக்கலாம்.

Puffy Nail Folds
வீங்கிய நகங்கள்

நீல நகங்கள் (Blue Nails)

நீல நிற நகங்கள் உங்கள் உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். இதனைப் பேச்சுவாக்கில் 'நகம் செத்துப்போச்சு' எனக் கூறுவார்கள். இது நுரையீரல், எம்பிஸிமா போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.

Blue Nails
நீல நகங்கள்

கடித்த நகங்கள் (Gnawed Nails)

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இத்தகைய பாதிப்பு ஏற்படும். இந்நிலை அப்செசிவ்-கம்பல்ஸிவ் கோளாறு (ஒ.சி.டி.), பதற்றம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நகங்களைச் சுற்றியுள்ள தோலிலிருந்து ரத்தப்போக்கு, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வாயைக் கொண்டு கடிப்பதால் உடல் முழுவதும் பாக்டீரியா, வைரஸ் தொற்று வர வாய்ப்புள்ளது.

Gnawed Nails
கடித்த நகங்கள்

எனவே, நகங்களின் அமைப்பு, நிறம், வடிவம், வீக்கம், ரத்தப்போக்கு அல்லது நகங்கள் தடிமனாகவும், மெலிந்தும் காணப்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது ஆகும்.

நகத்தைப் பாதுகாக்க வேண்டிய முறைகள்

  • நகங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நகங்களைக் கடிக்காமல், நெயில் கட்டர் உபயோகிப்பது நல்லது ஆகும்.
  • விரிசல் ஏற்பட்ட நகங்களையும், அதனைச் சுற்றியுள்ள தோலையும் அகற்றக்கூடாது.
  • குளித்த பிறகு நகம் வெட்டுவது நல்லது ஆகும். ஏனென்றால், அப்போது நகங்கள் மிகவும் லேசாக இருக்கக்கூடும்.
  • நகங்கள் மாறுதல் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படிங்க: உடலில் கிக் ஏற்றும் நறுமண எண்ணெய்கள்... பாலியல் மாயாஜாலங்களின் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.