ஒவ்வொரு விழாவிலும் ஒரு வித புதுமையான உணர்வை புத்தாடைகள் மூலம் தான் அடைய முடியும். தீபாவளி போன்ற விழாக்கள் வந்துவிட்டால், பெண்கள் துணிக்கடைக்கு படையெடுக்கத் தொடங்கிவிடுவர். எளிமையாக, அதே சமயம் கண் கவரும் ஆடைகள் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் 4 இந்திய ஆடைகளைக் குறித்து இங்கு காணலாம்.
- சேலை
- சல்வார் கமீஸ்
- அனார்கலி
- லெஹங்கா
சேலை
இந்தியா என்றதும் அதன் கலாசாரத்தில் சேலைதான் முதலில் நினைவுக்கு வரும். சேலைக்கும் நமது பாரம்பரியத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது காலத்தின் போக்கிற்கு ஏற்றபடி தற்போது மெருகேறியுள்ளது. தற்போது ஜிமிக்கி வைத்த சேலை, காட்டன், டிசைனர் ரப்ஃபிள் புடவை உள்ளிட்ட பல வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. எல்லா வயதினரையும் அழகாக காட்டக்கூடியதுதான் சேலையின் தனிச்சிறப்பு.
மெல்லிய உடல் தோற்றம் கொண்டவர்கள்: ஜூட் சில்க், டஸ்ஸர், ஸ்டிப் காட்டன், ஆர்கண்டி போன்ற மெட்டீரியல் புடவைகளை உடுத்தலாம். சில்க் புடவைகளை அடுக்குமடிப்புகளுடன் உடுத்தாமல், ஒன் லேயராக உடுத்தலாம்.
ஒல்லியாக, உயரமாக உள்ளவர்கள்: சற்று கெட்டியான புடவையை பயன்படுத்தலாம். இவர்களுக்கு இளம் நிறங்கள், போல்ட் பிரிண்ட்கள், அகலமான பார்டர் கொண்ட புடவைகள் பொருத்தமாக இருக்கும்.
குள்ளமான, தடிமனான உடல்வாகு கொண்டவர்கள்: சாப்ட் சில்க், மட்கா, மால்குடி மெட்டீரியல்கள் ஏற்றது. சரும நிறத்துக்கு ஏற்ற அடர்நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நன்றாக அடுக்குமடிப்புகள் செய்து உடுத்தினால், உடலுக்கு பொருத்தமாகவும், சற்று உயரம் கூடுதலாகவும் தெரியும்.
கவனம்:
வழுவழுப்பான புடவைகளை எவ்வளவு பிடித்திருந்தாலும் வாங்காதீர்கள். இது உங்கள் உடலைக் குண்டாகக் காண்பிக்கும்.
அனார்கலி:
அனார்கலி இந்தியாவின் வளமான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னம். இது பண்டைய காலத்தில் வட இந்தியப் பெண்களால் அணியப்பட்டது. பொதுவாக ஜொலிஜொலிப்பான இதன் வடிவமைப்புகள் விழாக்காலங்களில் விரும்பி அணியப்படுகிறது. அதில் எம்பிராய்டரி டிசைனுடன் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் என்பதால், சற்று கனமாக இருக்கும். இப்படி ஆடம்பரமாக அணிய விரும்பாதவர்கள் எளிமையான டிசைனில் கூட அணியலாம்.
சிலர், அனார்கலி -பலாஸ்ஸோ காம்போக்களில் சில மாற்றங்கள் செய்து டிரெண்டிற்கு ஏற்றார் போல அணிகின்றனர். அதே சமயம் உடல் முழுக்க கவர் செய்து நல்ல லுக் கொடுக்கும். வெள்ளை நிற டாப் உடன் நீல நிற பலாஸ்ஸோ, சில்வர் அக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்யலாம் அல்லது வெள்ளை நிற, நீல காம்போக்களுடனும் கூட மேட்ச் செய்யலாம்.
சல்வார் கமீஸ்:
இது மிகப் பழமையான இந்திய ஆடை. எல்லா காலங்களிலும் அணிந்து கொள்ள ஏற்றது. சிம்பிளான குர்தா, பேண்ட், துப்பட்டாவாக அணிந்தாலும் சரி அழகிய பாட்டியாலாவுடன் மெலிந்தவாகான குர்தி கூடவே, துப்பட்டா போட்டுக் கொண்டாலும் சரி, பெண்களுக்கு எடுப்பாக இருக்கும். துப்பட்டா கட்டாயம் அல்ல, அவரவர் விருப்பம்.
லெஹங்கா:
இது ஒரு காலத்தில் திருமண உடைகளாக இருந்தது. தற்போது காலத்திற்கேற்றபடி சமகால உடையாக மாறிவிட்டது. இளம்பெண்கள் எளிமையான லெஹங்காக்களை அணிய விரும்புகிறார்கள. குடும்ப விழாக்களுக்கு, நாள் முழுக்க அணிவதற்கு முழுக்க ஏற்றது எனக் கூறிவிடமுடியாது. சில மணிநேரங்கள் அணிவதற்கு ஏற்றது.
இது போன்ற ஆடைகள் ரெடிமேடாக வாங்குவதோடு துணிகளை எடுத்து அவற்றை நம் ரசனைக்கேற்ப தைத்து அணிந்து கொண்டால் வர்ணிக்க வார்த்தைகளும் வேண்டுமா?
இதையும் படிங்க:சருமப் பொலிவு, கூந்தல் பளபளப்பு - ஆயுர்வேத டாக்டரின் கலக்கல் டிப்ஸ்!