விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு மாரியம்மாள் ஊர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த முருகனும் சுரேஷும் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மாரியம்மாளிடம் தகராறு செய்து அவரை ஆயுதங்களைக் கொண்டு தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வன்னியம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, பெண்ணை தாக்கிய முருகனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: முன்விரோதத்தால் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!