ETV Bharat / state

ராஜபாளையத்தில் இடிதாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு - Youngster died due to Lightning at Rajapalayam

விருதுநகர்: ராஜபாளையம் ஆவரம்பட்டியில் ராட்சத இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

youngster-died-due-to-lightning-at-rajapalayam

author img

By

Published : Apr 29, 2020, 1:24 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் ஆவரம்பட்டி பகுதியில் வயல் வெளிப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர்.

ராஜபாளையத்தில் இடி தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

அப்போது ராட்சத இடி தாக்கியதில் முனீஸ்வரன் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையடுத்து, உயிரிழந்த முனீஸ்வரனின் உடல் உடற்கூறாய்விற்காக மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் அதிகாலையில் கனமழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.