ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்! - கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கச் சென்ற இளைஞர், கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில் அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்
கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்
author img

By

Published : Oct 3, 2020, 4:01 PM IST

Updated : Oct 3, 2020, 5:03 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள உதயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், வயல் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்ததைக் கண்டுள்ளார்.

இதையடுத்து, அவர் ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக கிணற்றிற்குள் இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். தொடர்ந்து ஆட்டுக்குட்டி சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் கிணற்றில் பார்த்தபோது, உள்ளே பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் முருகன் இருப்பதைக் கண்டனர்.

பின்னர், உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி, பலத்த காயங்களுடம் இருந்த முருகனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கிணற்றில் தவறி விழுந்து ஆட்டுக்குட்டியையும் பத்திரமாக மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான் பத்திரமாக மீட்பு!

Last Updated : Oct 3, 2020, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.