ETV Bharat / state

திருமணம் ஆனதிலிருந்தே கருத்து வேறுபாடு: மனைவியை எரித்துக்கொன்ற கணவன்! - மனைவியை எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவர் கை

விருதுநகர்: விராலிமலையில் மனைவியை எரித்து கொலை செய்த வழக்கில் கணவர் விருதுநகரில் கைது செய்யப்பட்டார்.

murder case
murder case
author img

By

Published : Dec 19, 2019, 4:29 PM IST

Updated : Dec 19, 2019, 4:41 PM IST

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் அருகேயுள்ள காந்திர நகரைச் சேர்ந்தவர் அழகர் (49). இவரது மகள் பானுரேகா (20). இவர் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அழகரின் தங்கை ஜானகி என்பவரது மகன் ராஜ்குமார் (26) என்பவருக்கும் பானுரேகாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமார் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இதனால், பானுரேகா தனது தந்தை வீட்டிலிருந்து கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். குடும்ப வாழ்க்கையில் ராஜ்குமாருக்கும் பானுரேகாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற பானுரேகா வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பானுரேகாவை காணவில்லையென பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அழகர் புகாரளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பானுரேகாவை தேடி வந்தனர். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி அருகே விராலிமலையில் உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இறந்தவரின் உடலை கைப்பற்றிய விராலிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தமிழ்நாட்டில் அண்மையில் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து சோதனையிட்டபோது எரித்துக் கொலை செய்யப்பட்டது பானுரேகா என்பது தெரியவந்தது. உடனடியாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ராஜ்குமாரை பிடித்து காவல் துறையினர் விசாரிக்கையில், குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி பானுரேகாவை விராலிமலைக்கு அழைத்துச்சென்று கொலை செய்தது தெரியவந்தது. விருதுநகர் வந்த விராலிமலை காவல் துறையினரிடம் ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 'உணவு உற்பத்திக்கு ஒருங்கிணைந்த விவசாயம் தேவை' - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்!

Intro:விருதுநகா்
19-12-19

மனைவியை எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவர் கைது

Tn_vnr_02_wife_murder_husband_arrest_photo_script_7204885Body:விராலிமலையில் மனைவியை எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவர் விருதுநகரில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் பாண்டியன் நகர் காந்திர நகரைச் சேர்ந்தவர் அழகர் (49). கட்டிடத் தொழிலாளி. இவரது மகள் பானுரேகா (20). விருதுநகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3ம் ஆண்டு படித்து வந்தார். அழகரின் தங்கை ஜானகி என்பவரது மகன் ராஜ்குமார் (26) என்பவருக்கும் பானுரேகாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமார் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பானுரேகா தனது தந்தை வீட்டிலிருந்து கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். குடும்ப வாழ்க்கையில் ராஜ்குமாருக்கும் பானுரேகாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற பானுரேகா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கல்லூரியில் படிக்கும் பானுரேகாவின் தோழியிடம் விசாரித்தபோது தனது கணவர் ஊருக்கு வந்துள்ளதாகவும், அவரைப் பார்க்க விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்வதாகக் கூறிச்சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து பானுரேகாவைக் காணவில்லையென பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அழகர் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து பானுரேகாவை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் திருச்சி அருகே உள்ள விராலிமலையில் காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விராலிமலை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். தமிழகத்தில் அண்மையில் காணாமல் போனவர்களை பட்டியலை வைத்து சோதனையிட்டபோது எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பானுரேகா என்பது தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, ராஜ்குமாரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி பானுரேகாவை விராலிமலைக்கு அழைத்துச்சென்று கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், விருதுநகர் வந்த விராலிமலை போலீஸாரிடம் ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
Last Updated : Dec 19, 2019, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.