ETV Bharat / state

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர் : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினரை காவல் துறையினர் குண்டுகட்டாகத் தூக்கி அகற்றினர்.

Virudunagar neet ban protest
Virudunagar neet ban protest
author img

By

Published : Sep 16, 2020, 6:03 PM IST

விருதுநகர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட்தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தீர்வாக அமைந்துள்ளது. எனவே தேர்வை தடைசெய்ய வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் வழங்கிய அனுமதி நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

ஆனால் தடையை மீறி ஆதித்தமிழர் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாகத் தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.