ETV Bharat / state

விருதுநகரில் இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளுக்கு வலை வீச்சு..! - Thirumalaipuram Youth Murder

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

Tn vnr murder விருதுநகர் இளைஞர் கொலை திருமலைபுரம் இளைஞர் கொலை அருப்புகோட்டை இளைஞர் கொலை Virudhunagar Youth Murder Thirumalaipuram Youth Murder Aaruppukottai Youth Murder
Virudhunagar Youth Murder
author img

By

Published : Feb 25, 2020, 1:18 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (27). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்றிரவு வெளியே சென்றுவருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் முத்துராமலிங்கம் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

அப்போது, அதே ஊரில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை அருகே முத்துராமலிங்கம் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மட்டும் கீழே விழுந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்து அருகில் தேடியபோது முத்துராமலிங்கம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர்

பின்னர் இச்சம்பவம் குறித்து ரெட்டியாப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முத்துராமலிங்கம் மீது அடிதடி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.