விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் விவேக். இவரது அலுவலகத்தில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா, வருவாய்துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரசு திட்டங்கள் குறித்த பணிகளின் ஆவணங்களை கேட்டபோது, கோட்டாட்சியரிடம் விவேக் முறையாக சமர்பிக்கவில்லை. மேலும், ஜமாபந்தி கணக்குகளையும் சரியாக காட்டவில்லை. இதில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அரசு பணிகளை முறையாக செய்யாமல், தவறாக பயன்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் விவேக்கை, தற்காலிக பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் செல்லப்பா உத்தரவிட்டார்.
அரசு பணியில் முறைகேடு; விஏஓ சஸ்பெண்ட்! - விருதுநகர் கோட்டாட்சியர்
விருதுநகர்: அரசு பணியை தவறாக பயன்படுத்திய கிராம நிர்வாக அலுவலரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.