ETV Bharat / state

மின்னல் தாக்கி பட்டாசு தொழிலாளி உயிரிழப்பு - விருதுநகரில் கனமழை

விருதுநகர்: இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் பட்டாசு தொழிலாளி ஒருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

virudhunagar heavy rain
thunder lighting attack
author img

By

Published : May 15, 2020, 8:37 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆலங்குளம் பகுதியில் நேற்று மாலை (மே-14) இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஆலங்குளம் அருகேயுள்ள இராமுத்தேவன்பட்டி காலணி அருகே பட்டாசு ஆலையில் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி (32) மற்றும் இவரது வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த தூத்துக்குடி இலங்கை அகதி முகாமைச் சார்ந்த அந்தோனிராஜ் (40) ஆகியோர் மீது மின்னல் தாக்கியது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த அந்தோனிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், வாகனம் ஓட்டி வந்த வேலுசாமி, லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முதியோரை குறிவைத்து கொள்ளையடித்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.