தமிழ்நாட்டில் கரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதோடு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தொற்றின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக ஏற்கெனவே சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் வருகின்ற 20ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனைத்துக் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச்சூழ்நிலையில், அருப்புக்கோட்டையிலுள்ள அனைத்துக் கடைகளும் மாலை 3 மணிவரை மட்டுமே செயல்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வியாபார சங்கத்தினர் சார்பில், தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று நகர்ப் பகுதியில் உள்ள கடைகளை அடைக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லுமாறு பொதுமக்களுக்கு வியாபாரிகளே வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் இளைஞர் உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை