ETV Bharat / state

தொழில் போட்டியால் நேர்ந்த விபரீதம்! - virudhunagar district news

திருச்சுழி அருகே தொழில் போட்டி காரணமாக கடப்பாரையால் தலையில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

virudhunagar-murder-issue
virudhunagar-murder-issue
author img

By

Published : Jul 17, 2021, 4:48 PM IST

விருதுநகர்: திருச்சுழி அருகே வடக்கு நத்தம் கிராமத்தில் டீக்கடை நடத்திக்கொண்டு சமையல் பாத்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் பாலசுப்பிரமணியன். அதே ஊரைச் சேர்ந்த வள்ளிமுத்து என்பவர் பலசரக்குக் கடை நடத்திக்கொண்டு சமையல் பாத்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இருவருக்குமிடையே தொழில் போட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதே ஊரில் உள்ள ஒரு கட்டடத்திற்கு இருவருக்கும் பங்கு உண்டு என அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (ஜூலை.16) பாலசுப்பிரமணியன் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்திற்கு நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டு வீட்டின் முன்பாக உள்ள தள்ளுவண்டியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.=

இதனையறிந்த வள்ளிமுத்து பல நாள் காத்திருந்து நேற்று இரவு பாலசுப்பிரமணியனை கடப்பாரையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், வள்ளிமுத்துவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல் கிடங்கு ஒதுக்கீட்டில் முறைகேடு - விவசாயிகள் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.