ETV Bharat / state

விதிமீறல் பட்டாசு ஆலைகள் உரிமங்கள் ரத்து - மாவட்ட ஆட்சியர் - முறையான உரிமம்

விருதுநகர் : முறையான உரிமம் இல்லாமல் செயல்படும் அனைத்து பட்டாசு ஆலைகளின் உரிமங்களும் ரத்துச் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார்.

விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து

author img

By

Published : Mar 21, 2020, 12:00 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிபாறையில் இயங்கி வருகிறது.

டி.ஆர்.ஓ லைசன்ஸ் வாங்கி செயல்படும் இந்த ஆலையில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பேன்சி ரக பட்டாசு தயார் செய்யும் போது பட்டாசு மருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள அறைகள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்தன. விபத்தில் தென்காசி மாவட்டம் மைப்பாறையைச் சேர்ந்த இராணி (42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32), தங்கம்மாள் (39), முருகைய்யா (49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே தீக்கிறையாகி உயிரிழந்தனர்.

மேலும், சுப்பிரமணியன், பொன்னுத்தாய், சுப்பம்மாள், அய்யம்மாள், மாடசாமி, பேச்சியம்மாள், முருகலட்சுமி, ஜெயராம் ஆகிய 7 பேர் பலத்த காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து செய்தியாளர்களைச் சந்தித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் இந்த தனியார் பட்டாசு ஆலை சில மாதங்களாக அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்ததால் கடந்த ஆண்டு இந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் உரிய உரிமத்தை பெற்றுக் கொண்டு செயல்பட அறிவுறுத்தியிருந்தது.

அவர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் இந்த விபத்து நடந்தது என்றும் இச்சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும். 8 பேர் கடுமையான தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

விதிமீறல் பட்டாசு ஆலைகள் உரிமங்கள் ரத்து

அனைத்து பட்டாசு உரிமையாளர்களும் முறையான உரிமம் பெற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் உற்பத்தியை செய்ய வேண்டும் விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றார். மேலும் மருத்துவ அறிக்கை வந்தவுடன் இந்த தனியார் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

இதையும் படிங்க :தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.