விருதுநகர்: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதையடுத்து அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராகப் பொறுப்பேற்று இன்று அவரது வீட்டிற்குத் திரும்பினார்.
அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சார்பாக மந்திரங்கள் முழங்க மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சென்றனர்.