ETV Bharat / state

'வரும் தேர்தல் தேச பக்தர்களுக்கும் தேச துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல்' - எல்.முருகன்

author img

By

Published : Feb 17, 2021, 7:15 AM IST

விருதுநகர்: வரும் தேர்தல் தேச பக்தர்களுக்கும் தேச தூரோகிகளுக்கும் இடையிலான தேர்தல் என்று பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய எல்.முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன்
எல்.முருகன்

விருதுநகர் அருகே சூலக்கரையில் தாமரை எழுச்சி மாநாடு, பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

இதில் மூவருக்கும் விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

தாமரை எழுச்சி மாநாடு, பாஜக பூத் கமிட்டி மாநாடு

மாநாட்டில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், "பாஜக தமிழ்நாடு முழுவதும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் உலகத்தின் வழிகாட்டியாக உள்ள மோடியை முன்நிறுத்தி தமிழ்நாட்டின் பாஜகவின் தேர்தல் பரப்புரை இருக்கும்.

ஏழு ஜாதி உட்பிரிவுகளை ஒன்று சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்ற 50 ஆண்டுகால தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை அரசியலுக்காக மோடி நிறைவேற்றவில்லை. இது 2012இல் தீர்மானிக்கப்பட்டது. பாஜக தமிழ்நாடு வளர வேண்டும் என நினைக்கிறது ஆனால் திமுக தமிழ்நாடு வளரக்கூடாது என நினைக்கிறது. வரும் தேர்தல் தேச பக்தர்களுக்கும் தேச துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.