விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி கள்ளான்பிரம்பு கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் - ராணி தம்பதி கட்டட வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு சரவணன் (2) என்னும் மகன் உண்டு.
அதேபகுதியில் வசிக்கும் விவசாயக் கூலி வேலை செய்துவரும் பஞ்சராஜன் - சித்ராதேவி தம்பதியின் குழந்தைகளான வீரவிக்னேஷ்வரி (3) முத்துலட்சுமி (2) ஆவர். மூன்று குழந்தைகளும் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கியுள்ளனர். குழந்தைகள் மயக்கம் அடைந்ததை கண்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதே வாந்தி மயக்கத்திற்கு காரணம் என தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இதையும் படியுங்க: கொரோனா வைரஸ் - மாநில பேரிடராக அறிவித்தது கேரளா!