ETV Bharat / state

கையூட்டு கேட்ட நில அளவையர்: கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பட்டா மாறுதலுக்கு கையூட்டு கேட்ட நில அளவையர், உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

land surveyor
land surveyor
author img

By

Published : Sep 12, 2020, 9:48 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவர் அருப்புக்கோட்டை நகர்ப் பகுதியில் புதியதாக இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தை நில அளவு செய்து பட்டா மாறுதல் செய்துதர அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் நகர நில அளவை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு பணிபரியும் நில அளவையர் சிவசங்கரன், அவரது உதவியாளர் சூரிய நாராயணன் இருவரும் பட்டா பெயர் மாறுதலுக்காக ரூ.15,000 கையூட்டு கேட்டுள்ளார்கள். இறுதியாக ரூ.12,000 கொடுப்பதாக சின்னமுத்து சம்மதித்துள்ளார்.

இது குறித்து சின்னமுத்து லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழிகாட்டுதலின்படி சின்னமுத்து ரசாயனம் தடவிய 100 ரூபாய் நோட்டுகளை சூரியநராயணனிடம் கொடுத்து நில அளவையர் சிவசங்கரனிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையிலான காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்தனர்.

மேலும் இது குறித்து நில அளவையரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.