ETV Bharat / state

இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்திய காவலர்கள்!

author img

By

Published : Mar 23, 2020, 12:04 AM IST

விருதுநகர்: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திறக்கப்பட்டிருந்த கடைகளை காவலர்கள் மூட அறிவுறுத்தினர்.

Tn vnr curfew public place  Vathiraeruppu Police advised to close meat shops!  Vathiraeruppu curfew  இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்திய காவலர்கள்!  வத்திராயிருப்பில் கடைகள் திறப்பு  மக்கள் ஊரடங்கு, கரோனா வைரஸ்  Corona shops

சீனாவில் முதன் முதலாக அறியப்பட்ட கரோனா வைரஸ் கிருமியானது தற்போது உலகெங்கிலும் உள்ள 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

இந்தக் கிருமிக்கு இதுவரை 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகப்பட்சமாக உயிர் இழப்பு மற்றும் பாதிப்பு கொண்ட தேசமாக சீனா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் திகழ்கின்றன.

இந்தியாவிலும் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தக் கிருமி தொற்று ஏழு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி மாநில சுகாதாரத் துறையினர் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இந்தக் கிருமி பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க இன்று மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியில் இறைச்சி கடைகள் உள்ளிட்ட சில கடைகள் திறந்திருந்தன.

இந்தக் கடைகளை அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அடைக்க அறிவுறுத்தினர்.

இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்திய காவலர்கள்!

இதையடுத்து கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை அடைத்தனர். காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஊரடங்கு தற்போது அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவர்களுக்கு சக மருத்துவர் விஜய பாஸ்கர் எழுதிய பாராட்டு மடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.