விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி கிராமத்தில் மகேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் ஜெயராணி என்பவரும், அவரது மகள் சங்கரியும், மகன் விக்னேஷ்வரனும் இன்று (ஆகஸ்ட் 1) காலை 7 மணி முதல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது வெடிபொருள்கள் உராய்வினால் ஏற்பட்ட விபத்தில், ஜெயராணியின் குழந்தைகள் இருவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால், அதிருஷ்டவசமாக ஜெயராணிக்கு காயம் ஏற்படவில்லை. உடனே அக்கம்பத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, வெம்ப கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வெம்ப கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.