விருதுநகர் மாவட்டம் காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் (பிப்.25) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். அதன் காரணமாக பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடம் புதுப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.