விருதுநகரில் தமிழ்நாடு அரசின் சார்பாக நடைபெற்ற நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 567 பயானாளிகளுக்கு ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் விலை உயர்வு குறித்து மக்களிடம் எந்த கொந்தளிப்பும் இல்லை என்றும், பால் விலை உயர்வு பற்றி குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியை விமர்சித்த அவர், இந்திய இறையாண்மைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்றும், காஷ்மீர் விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்தும் ஒன்றாக உள்ளது எனவும் கூறினார்.