ETV Bharat / state

கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு - கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரம்

விருதுநகர்: அண்ணா நகரில் கடன் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பை சேரந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

fh
fh
author img

By

Published : Jun 18, 2021, 6:00 PM IST

விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியை சேர்த்த ஜெயா என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவர் ரூபாய் 50,000 கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த அந்தக் கடனை வேளாங்கண்ணி ரூ. 1,50,000 வரை திருப்பி செலுத்தியும் ஜெயா தொடர்ந்து அசல் தொகையை கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று (ஜூன்17) மாலை வேளாங்கண்ணியின் தங்கை மகன் சதீஷ், ஜெயா வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சதீஷை சமாதனப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து நேற்றிரவு (ஜூன்.17) ஜெயா தரப்பை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அண்ணாநகர் பகுதிக்குள் புகுந்து வேளாங்கண்ணியின் உறவினர்கள் சதீஷ், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்டவர்களை இரும்புகம்பி, அரிவாளால் தாக்கி அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த மோதலில் மூன்று பேருக்கு சரமரியாக அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தகவலிறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.