ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கடைகளை இடிக்கும் முடிவுக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு! - Smart City project in thoothukudi

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கடைகளை இடிக்கும் முடிவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இடிக்கும் கடைகளுக்குப் பதில் புதிய கடைகள் கட்டித்தரப்படும் என்ற உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் எனவும் இல்லையென்றால் அரசை எதிர்த்துப் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

vikramaraja
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கடைகளை இடிக்கும் முடிவுக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு
author img

By

Published : Dec 6, 2020, 7:16 PM IST

விருதுநகர்: வணிக சங்கங்களின் பேரமைப்பு விருதுநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று விருதுநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்பு பேசிய விக்கிரமராஜா, "தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அரசு கடைகளை இடித்து கடைகளை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடியில் இடிக்கப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை கட்டித்தரமால் அரசு இழுத்தடிக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடிக்கப்படவேண்டும் என்றால் எத்தனை மாதங்களில் கடைகள் கட்டி முடிக்கப்படும் என்ற உத்திரவாதம் தந்தால் மட்டுமே கடைகளில் அரசு கைவைக்கமுடியும். இல்லையென்ரால் அதை எதிர்த்து போராடுவதற்கு தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் போராடத் தயாராக உள்ளனர். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கடைகளை இடிக்கும் முடிவுக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் நாளை நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதுகுறித்த முடிவு நாளை அக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியை நீக்கப்பட்டிருப்பதற்து எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். மழையினால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் மீள முடியாமல் இருக்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் உருவ பொம்மை எரிப்பு: கல் வீச்சில் ஈடுபட்ட அதிமுக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.