ETV Bharat / state

கட்டப்பஞ்சாயத்து கொடுமை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! - collector office

விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின்போது கட்டபஞ்சாயத்துக் காரணமாக தற்கொலை செய்ய முயன்ற குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்
author img

By

Published : Jun 3, 2019, 12:42 PM IST

விருதுநகரில் உள்ள கட்டபொம்மன் தெருவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தங்கபாண்டி என்ற கட்டட தொழிலாளி தனது தாய் முத்துலட்சுமி, தனது மனைவி சுகந்தி, மூன்று பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வீடு மற்றும் இடம் வாங்கி அங்கு குடிபெயர்ந்துள்ளார். அவற்றை அபகரிக்கும் நோக்கத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் முயற்சி மேற்க்கொண்டு வருவதாக தங்கப்பாண்டி தெரிவித்தார்.

இதனால் அந்த ஊரில் உள்ளவர்கள் தன் குடும்பத்தினரை புறக்கணிப்பதாகவும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, கழிவு நீர் கால்வாய் பயன்படுத்தக் கூடாது, குழந்தைகளைத் தெருவில் எங்கும் விளையாடவிடக் கூடாது, பொதுப்பாதையில் நடக்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கூறினார். தங்களை ஊரைவிட்டே விரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் கட்டப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்படாத காரணத்தால் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்த தங்கப்பாண்டி

இதுகுறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் நான்கு முறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர் வரை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த புகார் சம்பந்தமாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து தன்னையும் தன் குடும்பத்தினரையும் அலைக்கழித்து வருவதாகக் கூறிய அவர், தனக்கு நீதி கிடைக்கவில்லையென்பதால், குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தார். பின்பு அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி தங்கப்பாண்டியுடன் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:விருதுநகர்
03-06-19

கட்டப்பஞ்சாயத்து காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தனார் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி.

Body:விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரி புரத்தில் கட்டிடத் தொழில் செய்யும் தங்கபாண்டியின் சொந்த வீட்டை அபகரிக்க கட்ட பஞ்சாயத்து  செய்து வருவதாகவும் அதற்கு கட்டுப்படாத காரணத்தால் அவரையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக தங்கபாண்டி குடும்பத்தினர் ஏற்கனவே புகார் செய்திருந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நாள் அன்று கொத்தனார் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி.

விருதுநகரில் உள்ள கட்டபொம்மன் தெருவில்  கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தங்கபாண்டி என்ற கட்டிட தொழிலாளி தனது தாய் முத்துலட்சுமி  மற்றும் தனது மனைவி சுகந்தி மற்றும் மூன்று பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்து உள்ளார். தங்க பாண்டி  விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வீடு மற்றும் இடம் வாங்கி அங்கு குடி பெயர்ந்து உள்ளார். அவற்றை அபகரிக்கும் நோக்கத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் முயற்சி மேற்க்கொண்டு வருவதாக தங்கப்பாண்டி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். தன் வீட்டையும் நிலத்தையும் அபகரிக்க முயல்வார்கள் ஊரில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் அவர்களின் பேச்சுக்கு அடிபணிந்து இந்த ஊரில் உள்ளவர்கள் தன்  குடும்பத்தினரை புறக்கணிப்பதாகவும் இந்த கிராமத்தில் உள்ள  பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது எனவும் கழிவு நீர் கால்வாய் பயன்படுத்த கூடாது எனவும்  குழந்தைகளைத் தெருவில் எங்கும் விளையாட கூடாது எனவும் ஊரில் உள்ள பிற குழந்தைகளுடன் தன் குழந்தையை விளையாட அனுமதிக்காமல் புறக்கணிப்பதாகவும் பொதுப்பாதையில் நடக்க அனுமதிப்பதில்லை.  எங்களை ஊரைவிட்டே விரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் கட்டப் பஞ்சாயத்துக்கு கட்டுப்படாத காரணத்தால் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைப்பதாக கூறிவருகிறார்கள் தங்களிடம் பொங்கலுக்கு வரிவசூல் செய்வதில்லை தங்களை கோவிலுக்குள்ளும் அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டு கூறினார். தங்கப்பாண்டி வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் கல் எறிதல், கதவைப் பூட்டிவிடுதல் எனத் தொடர்ந்து தன் அம்மாவையும் மனைவியையும் பயமுறுத்திவருவதாகவும்  தங்கப்பாண்டி புகார் தெரிவித்தார். இதுகுறித்து அருகில் ஆமத்தூர் காவல் நிலையத்தில் 4 முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர் வரை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தங்கள் வீட்டையும் நிலத்தையும் அபகரிக்க நினைப்பவர் அருகில் உள்ள ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தன் செல்வாக்கை பயன்படுத்தி தங்களை பயமுறுத்தி வருவதாகவும் தங்கபாண்டி தெரிவித்தார் இந்த புகார் சம்பந்தமாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து தன்னையும் தன் குடும்பத்தினரையும் அலைக்கழித்து வருகின்றனர். சொந்தமாக வீடு வாங்கி வாழ்வதற்க்கு இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம்  இது குறித்து ஏற்கனவே பலமுறை பல இடங்களில் புகார் மனுக்கள் கொடுத்துள்ள நிலையில் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கொத்தனார் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தார் பின்பு அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு கொத்தனாரை குடும்பத்துடன் அழைத்துச் சென்றனர்.

பேட்டி
தங்கப்பாண்டி (கட்டிடத் தொழிலாளி)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.