விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (38). அவர் மீது கொலை, கொள்ளை என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் ஜானகி (30) என்பவருக்கும திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தையில்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணத்தால் வருமானமின்றி அவர் மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவர் பாண்டியன் நகர்ப் பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவரில் கையில் பெட்ரோலுடன் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அதனையறிந்த பாண்டியன் நகர் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துணை கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவயிடத்திற்கு விரைந்து, ஒலிப்பெருக்கி மூலம் முனியாண்டியிடம் நான்கு மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, கீழே இறங்கிவந்த அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: மின் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி - நூலிழையில் உயிர் தப்பிய ’குடிமகன்’