விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து திருச்சுழி, தமிழ்பாடி, பள்ளிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.தமிழ் பாடி பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்களைச் சரிசெய்யும் பணியில் மின் வாரிய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வெப்பச்சலனம் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பின் இரண்டு நாட்களாகப் பெய்து வரும் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: ஒகேனக்கல் நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்வு!