விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் செண்பக தோப்பு பேயனாற்று ஓடையில் நீர்வரத்து அதிகமாக வர தொடங்கியுள்ளது.
இதனால், இப்பகுதியில் குளங்கள், கண்மாய்கள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில் ராஜபாளையம் அருகே எம்.பி.கே.புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மகன் கண்ணன் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். நீச்சல் தெரியாத மாணவர் கண்ணன் தனது எட்டு நண்பர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான பேயனாற்று ஓடையில் குளிக்க சென்றுள்ளார்.
ஓடையில் நீச்சல் கற்றுக்கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மம்சாபுரம் காவல் துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 2 பெண் பிள்ளைகள் போதாதாம்: ஆண் குழந்தை கேட்டு அமெரிக்க மாப்பிள்ளை டார்ச்சர்