ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு கரோனா இல்லை!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததால், யானையை புத்துணர்வு முகாமிற்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

ஆண்டாள்
ஆண்டாள்
author img

By

Published : Feb 6, 2021, 11:16 AM IST

ஒவ்வொரு ஆண்டும் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் வருகிற 8ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த முகாமில் பல்வேறு கோயில் யானைகள் சில தனியார் யானைகள் உள்பட ஏராளமான யானைகள் பங்கேற்பது வழக்கம். தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக மனிதர்களுக்குப் பரிசோதனை செய்வதுபோல் முகாமில் பங்கேற்க உள்ள யானைகள் அனைத்திற்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவிற்கும் கோவிட் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் தலைமையில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் யானைக்கு கோவிட் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு கரோனா இல்லை

இதனைத்தொடர்ந்து 8ஆம் தேதி நடைபெறும் தேக்கம்பட்டி முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை கிளம்பத் தயாராகிவருகிறது.

இதையும் படிங்க: நெல்லையில் மண்டலப் புற்றுநோய் மையம்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.