ETV Bharat / state

ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொடியேற்றம்!

விருதுநகர்: ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொடியேற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
author img

By

Published : Jul 16, 2020, 5:02 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆண்டாள் கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி

தேரோட்டத்தன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் இதில் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். குறிப்பாக 9 நாள்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வந்து ஆண்டாளை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் பக்தர்களின்றி நடைபெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் 24ஆம் தேதி கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி தங்க தேர் இழுக்க இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஜூலை16) கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிபட்டம் மாட வீதிகளில் மேல தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கொடிப்பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றன.

கொடியேற்றத்தை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்துடன் காட்சி அளித்தனர். பின்னர் கொடியை அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினார்.

மேலும் இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பக்தர்கள் கூட்டம் கூடியதால் செயல் அலுவலர் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கினார். பின்னர் பக்தர்கள் முன்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: 110 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.