விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை அணிந்து கொண்டு மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடந்துவருகிறது. முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்ரா பௌர்ணமி தினமான நாளை (ஏப்ரல்.16) சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, காலையில் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதற்காக கோயில் வளாகத்திலேயே பிரத்யேக மலர்களை கொண்டு மாலை, கிளி தயாரிக்கப்பட்டன.
இந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை ஆண்டாள் சூடிய பிறகு நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இவை கள்ளழகர் மதுரை தல்லா குளத்திற்கு வரும்போது அவருக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்த மாலை, கிளி, பரிவட்டம் மட்டுமே அணிந்து கள்ளழகர் பக்தர்களுக்குக் காட்சி தருவார்.
இதையும் படிங்க: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : மாசி வீதிகளை வலம் வரும் மீனாட்சி - சொக்கநாதர்