விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 1990ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சமடைந்தவர்கள்.
இந்நிலையில், கடந்த 30ஆண்டுகளாக இம்முகாமில் வசித்துவரும் தாங்கள், இலங்கைக்கு திரும்பிச் சென்று வாழ முடியாது என்பதால், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட அகதிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.