விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேவுள்ள முறம்பு மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு பொன்சீனி (17), பிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று (டிச. 04) காலை கழிவறைக்குச் சென்ற பொன்சீனி, அங்குள்ள சுவிட்சை போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் அவர் துடிதுடித்துள்ளார். இதனைக் கண்ட அவரது தம்பி பிரபாகரன், அண்ணனைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில், பிரபாகரன் சிறுகாயங்களுடன் தப்பித்துவிட்டார். இதையடுத்து, பொன்சீனி சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார். பின்னர், அவரை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தளவாய்புரம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சுருளி அருவி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!