விருதுநகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு அறியும் கருவிகள் அனுப்பிவைக்கும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு விருதுநகர் நகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 100 வாக்குப்பதிவுகள் அறியும் கருவிகள், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 530 வாக்குப்பதிவு அறியும் கருவிகளும், 520 கட்டுப்பாட்டுக் கருவிகள் என மொத்தம் விருதுநகர் மாவட்டத்திலிருந்து 630 மின்னணு வாக்குப்பதிவுகள் அறியும் கருவிகள், 520 கட்டுப்பாட்டுக் கருவிகள் அனுப்பிவைக்கும் பணி நடைபெற்றுவருகின்றது.