ETV Bharat / state

பள்ளி மாணவி  தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி! - பள்ளி மாணவி  தீ குளித்து தற்கொலை முயற்சி

விருதுநகர்: பெற்றோர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த 16 வயது மகள், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

hospital
author img

By

Published : Aug 19, 2019, 7:50 PM IST

Updated : Aug 19, 2019, 10:13 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென்வடல் புது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் (16). இவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இசக்கியம்மாள் வீட்டில் பெற்றோர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை பெற்றோர்களுக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டபோது, அதைத் தடுக்க இசக்கியம்மாள் முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் சண்டையிட்டனர்.

இதனால் மனமுடைந்த இசக்கியம்மாள், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் இசக்கியம்மாளுக்கு 90 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த இசக்கியம்மாளை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

school student suicide attempt  kerosene firing  viruthunagar  விருதுநகர்  பள்ளி மாணவி  தீ குளித்து தற்கொலை முயற்சி  பெற்றோர்கள் இடையே குடும்ப தகராறு
மேல்சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் காட்சி

இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:விருதுநகர்
19-08-19

குடும்ப தகராறு காரணமாக பள்ளி மாணவி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி.

Tn_vnr_02_school_student_suicide_attempt_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தென்வடல் புது தெருவை சேர்தவர் மாரியப்பன் இவருடைய மகள் இசக்கியம்மாள்(16) இவர் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். இசக்கியம்மாள் வீட்டில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதை இசக்கியம்மாள் தடுத்துள்ளார். இதுபோன்று அடிக்கடி தகராறு ஏற்படுவதால் மனமுடைந்த இசக்கியம்மாள் வீட்டை பூட்டி கொண்டு வீட்டில் இருந்த மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதையடுத்து அருகில் இருந்த இசக்கியம்மாளின் பெற்றோர் வீட்டின் ஒட்டை உடைத்து வீட்டிற்குள் இறங்கி இசக்கியம்மாள் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இசக்கியம்மாள் 90 சதவீதம் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த சாத்தூர் நகர் போலீஸார் காயமடைந்த இசக்கியம்மாளை,மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல்சிகிச்சைகாக சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Aug 19, 2019, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.