ETV Bharat / state

பொதுமக்கள் இல்லாமல் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற சயன சேவை

விருதுநகர்: ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி 7ஆம் நாள் சயன சேவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட்டர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Aadi festival at andal temple
பொதுமக்கள் இல்லாமல் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற சயன சேவை
author img

By

Published : Jul 23, 2020, 12:45 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று திருத்தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் 7ஆம் திருநாள் அன்று நடக்கும் சயன சேவை மிகவும் புகழ் பெற்றவையாகும்.

இதையடுத்து தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடை பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு சில நிபந்தனைகளுடன் கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Srivilliputtur Andal temple
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் ராஜகோபுரம்

அந்த வகையில், ஆண்டாள் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர விழா 7ஆம் நாளை எட்டியுள்ளது. வழக்கமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள கிருஷ்ணன்கோயிலில், ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் தலை வைத்து இருக்கும் சயனசேவை நடைபெறும்.

Sayana sevai event in Andal temple
ஆண்டாள் கோயில் சயண சேவையில் பங்கற்ற பட்டர்கள்

இந்த சயன சேவை எனப்படும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே நடைபெறும் என்பதால் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

பொதுமக்கள் இல்லாமல் ஆண்டாள் கோயிலில் ஆடிபூர திருவிழா

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயில் பிரகாரத்தில் நடைபெற்ற சயனசேவை நிகழ்ச்சியில், திருக்கோயில் ஸ்தலத்தார், அலுவலர்கள் மட்டுமே தனிப்பட்ட இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் விழா ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.