விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரியில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்துவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பௌர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதோஷம், சிவராத்திரி, தை அமாவாசையை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, 4 நாள்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை, கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.
தை அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும்; பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க முடியும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காஞ்சி காமாட்சியம்மன் கோயில் தங்கத் தேர் வீதியுலா