ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், மக்கள் மிகுந்த பண கஷ்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும், 5ஆயிரம் ரூபாய் பண்டிகை கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சுப்பையா என்பவரை உறுப்பினராக சேர்த்தது மிகவும் கண்டனத்திற்கு உரியது. அவரை நிர்வாகக் குழுவில் இருந்து நீக்குவது மட்டும் இல்லாமல் மக்கள் பிரதிநிதிகளை உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். வடகிழக்கு மழை தொடங்கினால் என்ன பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தும், முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால், ஒரு நாள் இரவில் பெய்த மழை சென்னையை சீரழித்துள்ளது.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க : லாரிகளில் ஜவுளி லோடுகள் ஏற்றப் போவதில்லை': மாநில லாரி உரிமையாளர்கள் தலைவர் அறிவிப்பு!