விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது. பின்பு பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் அந்த கார் யாருடையது, எங்கிருந்து வந்தது, உரிமையாளரின் விவரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
நகரின் முக்கிய பகுதியில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு இருந்த காரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அப்பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: ஆசிட் வீசிய மாணவன் உட்பட 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது! கடலூரில் அதிரடி!