ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

author img

By

Published : Jun 27, 2020, 5:57 PM IST

விருதுநகர்: விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Relatives struggle in refuse to buy body

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-சிவகாசி பிரதான சாலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு முத்தால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (40), மகாலட்சுமி (35), ஆதி (14) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, திடீரென்று ஒரு கார் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனையடுத்து, காரை ஓட்டி வந்த பிரேம்குமார், மூவரையும் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதில் மகாலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த வள்ளியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் இறந்தவர் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாத்தூர் அரசு மருத்துமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சாத்தூர் நகர காவல் ஆய்வாளர் சுபக்குமார் வாக்குறுதி அளித்ததன் பேரில், உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடலைப் பெற்றுச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.