விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நடந்த கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். பின்னா் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
"நேரு கொண்டு வந்த இருமொழி கொள்கையில்தான் அதிமுகவுக்கு உடன்பாடு உண்டு. ஆனால், மும்மொழி கொள்கை என்று வந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியை கட்டாயமாக்கினால் அதனை ஏற்று கொள்ள முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது. மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கிடைக்காததைப் பற்றி அதிமுகவே கவலைப்படாத போது கமலுக்கு என்ன கவலை. மத்திய அமைச்சரவையில் அங்கம் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு எந்த பங்கமும் இல்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தும் செய்து தர மோடி அரசு தயாராக உள்ளது", என்றார்.