ஜாமியா பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திண்டுக்கல் தற்போதைய செய்தி
திண்டுக்கல்: டெல்லி ஜாமியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஜாமிய பல்கலைக்கழகத்திலும் சிஏஏவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியில் சுட்டார். இதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். காவலர்கள் அருகிலிருந்தபோதே நடைபெற்ற இந்தத் துப்பாக்கி சூடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், இன்று வத்தலகுண்டு பள்ளிவாசல் எதிர்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுகவினர் ஒன்றுதிரண்டு டெல்லி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!
மாணவர்கள் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்
Body:திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 17வயது இளைஞர் ஒருவர் மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியில் சுட்டதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஊடகங்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் சுற்றி இருந்த சமயத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு
நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இன்று வத்தலகுண்டு பள்ளிவாசல் எதிர்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுகவினர் ஒன்றுதிரண்டு டெல்லி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் துப்பாக்கிச்சூட்டின் போது கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையையும் மத்திய அரசையும் வன்மையாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.Conclusion: