விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் என்ற பட்டியூரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த அட்டை கம்பெனிக்கு செங்கல் ஏற்றி வந்துசென்ற அருப்புக்கோட்டை அருகே ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்யாமல் இருவரும் தனியே வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், அனிதா கர்ப்பமாகியுள்ளார்.
இது தெரிந்தவுடன் ஆனந்தராஜ் தனது தங்கைக்கு திருமணம் முடித்தவுடன் தன் வீட்டிற்கு கூட்டிச் செல்வதாக அனிதாவிடம் கூறியுள்ளார். ஆனால், சில மாதங்களாக அனிதாவை சந்திக்க வராமல் இருந்துள்ளார் ஆனந்தராஜ். இதையடுத்து ஒரு மாதத்திற்கு முன்பு ஆனந்தராஜ் வீட்டிற்குச் சென்று அவரைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அனிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தகவலறிந்து அங்கு வந்த பந்தல்குடி காவல் துறையினர், ஆனந்தராஜை தேடிக் கண்டுபிடித்து அனிதாவுடன் சேர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்து அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி ஆனந்தராஜை காவல் துறையினர் தேடிக் கண்டுபிடித்து சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சாத்தூர் மகளிர் காவலர் அனிதாவிற்கு தகவல் கொடுத்து வரவழைத்து பின், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!