ETV Bharat / state

'மோடி நினைத்தால் பஸ்பமாகிவிடுவீர்கள்!' - திமுகவை சீண்டும் கேடிஆர்

விருதுநகர்:  மத்திய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரணடைந்துவிட்டனர் எனவும், மோடி நினைத்தால் திமுக கட்சி பஸ்பமாகிவிடும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

minister rajenthira balaji
author img

By

Published : Jul 22, 2019, 1:49 PM IST

Updated : Jul 22, 2019, 2:57 PM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், "வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்பது போன மாசம், இப்போ அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. திமுகவின் கோட்டை இப்போ ஓட்டையாகிவிட்டது.

வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு சரியான அடி கொடுப்போம். திமுக எங்களிடம் வலுவாக மாட்டிக் கொண்டது. இதேபோல் வரும் தேர்தல்களிலும் திமுகவிற்கு மக்கள் சம்மட்டி அடிகொடுத்து வீட்டிற்கு அனுப்புவார்கள்.

மேலும், திமுகவின் கட்டுப்பாடு உதயநிதி ஸ்டாலின், சபரீசன் கையில்தான் உள்ளது. அவர்கள் இருவரும் பாடச் சொன்னால் மு.க. ஸ்டாலின் பாடுவார்; ஆடச் சொன்னால் ஆடுவார்.

டிடிவி தினகரன் சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்டரீதியாக வெளியில் கொண்ட வந்தால் அது மகிழ்ச்சி. அதேபோல் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்காது ஏமாற்றமே இருக்கும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எதிரிகள் அவரது நிழலைக்கூட அணுக முடியாது. எங்களது ஆட்சி குறித்து விமர்சனம் செய்துவரும் எதிர்க்கட்சிகளுடன் மேடை போட்டு விவாதிக்க நாங்கள் தயார்" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கை பற்றிய நடிகர் சூர்யாவின் கருத்து குறித்த கேள்விக்கு, நல்ல கருத்தை நடிகர் சூர்யா மட்டுமல்ல, யார் சொன்னாலும் அதை முதலமைச்சர் ஏற்றுக் கொள்வார் என பதிலளித்தார்.

தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கூக்குரல் கொடுக்காமல், மத்திய அமைச்சர்களுடன் கை குலுக்கிவிட்டு ஒரே இலையில் உணவு அருந்திவிட்டு வருவதாக விமர்சனம் செய்த ராஜேந்திர பாலாஜி, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மத்திய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரணடைந்து விட்டனர் என்பதை காட்டுகிறது என்றார்.

திமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் பரோட்டாவிற்கு மாவு பிசைந்துகொண்டு இருக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக, மோடி
திமுக, மோடி

தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை வேண்டாம் என தயாநிதி மாறன் இங்கே கூறிவிட்டு நாடாளுமன்றத்தில் எட்டு வழிச்சாலை வேண்டும் எனக் கூறுவதாக குற்றம்சாட்டிய ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடி நினைத்தால் திமுக கட்சி பஸ்பமாகிவிடும் என எச்சரித்தார்.

Intro:விருதுநகர்
22-07-19

மத்திய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரணடைந்து விட்டனர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.
Body:மத்திய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரணடைந்து விட்டனர். மோடி நினைத்தால் திமுக கட்சி பஸ்பமாகிவிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்பது போன மாசம், இப்போ அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. திமுகவின் கோட்டை இப்போ ஓட்டையாகி விட்டது.
வேலூரில் திமுகவிற்கு சரியான அடி கொடுப்போம், திமுக வலுவாக மாட்டிக் கொண்டது. திமுகவின் வேஷம் வேலூரில் கலைந்துவிடும். வேலூரில் அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது. வரும் தேர்தல்களில் திமுகவிற்கு மக்கள் சம்மட்டி அடிகொடுத்து வீட்டிற்கு அனுப்புவார்கள்

திமுவின் கன்ட்ரோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் கையில்தான் உள்ளது
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் பாடச் சொன்னால் மு.க.ஸ்டாலின் பாடுவார் ஆடச் சொன்னால் ஆடுவார். தற்போது ஸ்டாலினுக்கு பின்னாடி திமுக கிடையாது, திமுக தொண்டர்கள் இதை வெளியே சொல்ல முடியாமல் வேதனையில் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

கரிகால சோழன் ஆட்சி போல பரம்பரை பரம்பரையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த வருகிறார்கள் திமுகவினர். வாரிசு அரசியலை அரங்கேற்றம் ஸ்டாலினுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் வேலூர் தொகுதியில் திமுகவினர் களப்பணி ஆற்ற மாட்டார்கள். டிடிவி தினகரன் சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்டரீதியாக வெளியில் கொண்டு வந்தால் அது மகிழ்ச்சி
சசிகலா சிறையிலிருந்து வெளி வந்தாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்காது ஏமாற்றமே இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் எதிரிகள் அவரது நிழலைக்கூட அணுக முடியாது. அதிமுகவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது குறித்து திமுக, காங்கிரஸ் கட்சியினருடன் மேடை போட்டு விவாதிக்க தயார். தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து குறித்த கேள்விக்கு நல்ல கருத்தை சூர்யா மட்டுமல்ல யார் சொன்னாலும் அதை முதல்வர் ஏற்றுக் கொள்வார்.

நீட் தேர்வு விலக்கிற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் காங்கிரஸ் ஆட்சியில் திமுகவின் உதவியோடு கொண்டுவரப்பட்ட திட்டங்கள்

தமிழகத்திற்கு எதிரான எந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டேதான் இருக்கிறது

தற்போது திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கூக்குரல் கொடுக்காமல் மத்திய அமைச்சர்களுடன் கை குலுக்கி விட்டு ஒரே இலையில் உணவு அருந்திவிட்டு வருகிறார்கள். மத்திய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரணடைந்து விட்டனர். திமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் புரோட்டாவிற்கு மாவு தேய்த்துக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் 8 வழி சாலை வேண்டாம் எனக்கூறிவிட்டு நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் 8 வழி சாலை வேண்டும் என கூறுகிறார். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் காந்தி சிலை முன்பாக பதாகைகளை ஏந்தி போராடுவதை கைவிட்டு நாடளுமன்றத்தில் குரல் எழுப்ப முன்வர வேண்டும். மோடி நினைத்தால் திமுக கட்சி பஸ்பமாகிவிடும். நாங்கள் நினைத்தால் திமுக கட்சியே இல்லாமல் போய்விடும். நாட்டின் பிரதமரை முன்மொழிய கூடிய இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.Conclusion:
Last Updated : Jul 22, 2019, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.