ETV Bharat / state

தனியார் கிடங்கில் 4 டன் பிளாஸ்டிக் பதுக்கல்; உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! - banned plastic

விருதுநகர்: தனியாருக்கு சொந்தமான கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிடங்கின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

plastic
author img

By

Published : May 16, 2019, 7:20 PM IST

தமிழ்நாடு அரசு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்தது. இவற்றை நடைமுறைபடுத்த தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

இதைத் தொடர்ந்து விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் விருதுநகரில் பல்வேறு கடைகளில் இன்று சோதனை நடத்தினர். அப்போது மெயின் பஜாரில் உள்ள தனியார் கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்ட நான்கு டன் அளவிலான பாலித்தீன் பைகள், உணவு பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் அலுமினிய பாக்ஸ், டீ கப்புகள் போன்றவற்றை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்திருந்த கிடங்கின் உரிமையாளர் சிவசங்கர பாபுவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்
16-05-19

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு 25000 அபராதம்

விருதுநகரில் தனியார்க்கு சொந்தமான குடோனில் இருந்த  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 4 டன்  பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல் குடோனின் உரிமையாளர்க்கு ரூ 25 ஆயிரம் அபாரதம் விதித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை
      
தமிழக அரசு 2019 ஜனவரி 1 முதல் 14 வகையான பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பைககளை  பயன்படுத்த  தடை விதித்தது. இவற்றை நடைமுறை  படுத்த தமிழகம் முழுவதும் நகராட்சி மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி மற்றும் சுகாதார ஆய்வாளர் குருசாமி விருதுநகரில் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர் இன்று நடத்திய தீடீர் சோதனையில் விருதுநகர் மெயின் பஜாரில் சிவ சங்கர பாபு என்பவருக்கு சொந்தமான தனியார் குடோனில் இருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 டன் அளவிலான பாலிதின் பைகள் உணவு பார்சல் செய்ய பயன் படுத்தப்படும் அலுமினிய பாக்ஸ் டீ மற்றும் தண்ணீர் கப்புகள் போன்றவற்றை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை வைத்து இருந்த குடோனின் உரிமையாளர்க்கு   நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

TN_VNR_1_16_PLASTIC__RECOVERED_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.