தமிழ்நாடு அரசு 2019 ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. இவற்றை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி நேற்று விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் விருதுநகரில் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் விருதுநகர் ஆனி முத்து பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ரஷிம் என்பவருக்கு சொந்தமான தனியார் பாலீதின் பைகள் தயாரிக்கும் ஆலையின் குடோனில் இருந்த தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் அளவிலான பாலிதின் பைகள் உணவு பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் அலுமினிய பேப்பர்கள் போன்றவற்றை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.மேலும், ஆலையின் உரிமையாளர்க்கு நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
விருதுநகரில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற ரெய்டுகளில் ஆறு டன் அளவிலான தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலீதின் பொருள்களை நகராட்சி பறிமுதல் செய்துள்ளது.