விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புல்வாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேந்திரன், முருகேஸ்வரி தம்பதியினரின் மகன் முத்து மணிகண்டன் (21) . மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளார். இவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்கின்றனர்.
இந்நிலையில் இவர் வாழ்வாதாரத்திற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுயதொழில் அல்லது அரசு வேலை ஏற்படுத்தித் தர வேண்டுமென தாய் மற்றும் சகோதரனுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னை நீங்குவதோடு அடிப்படைத் தேவைகளை தன்னால் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என அவர் தெரிவிக்கிறார்..