ETV Bharat / state

திருவிழா, திருமண நிகழ்ச்சிகளுக்கு 50% தளர்வுகளுடன் விலக்கு கோரி மனு!

விருதுநகர்: தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 விழுக்காடு தளர்வுகளுடன் விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவிழா, திருமண நிகழ்ச்சிகளுக்கு 50% தளர்வுகளுடன் விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Apr 19, 2021, 2:37 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒளி, ஒலி, ஜெனரேட்டர், சாமியானா பந்தல், பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் அமைப்பாளர்கள் சார்பில் உள்ள பதிவுபெற்ற சங்கமான தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் என்ற சங்கம் உள்ளது.

திருவிழா, திருமண நிகழ்ச்சிகளுக்கு 50% தளர்வுகளுடன் விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடந்த 20 ஆண்டுகளாக அறநெறியுடன் தொழில் செய்பவர்களின் நலனுக்காகவும், தனிமனித சுய லாப நோக்கமின்றி செயல்படும் தொழிலாளர்கள் அடங்கிய இச்சங்க உறுப்பினர்கள் வாழ்வாதாரம் காக்க வேண்டியும், பொது முடக்கத்தில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 விழுக்காட்டில் தளர்வுகளுடன் தொழில்செயல்பட விலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அதில், "எங்களது தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடியது அல்ல; விசேஷங்கள், விழாக்கள் நடைபெறும் காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும்தான் வேலை இருக்கும்.

இந்தத் தொழில்களில் பல ஆயிரம் கடை உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை முதலீடுகளாக்கி தொழில் செய்துவருகின்றனர்.

இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களது குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். சுபநிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மூலமாக குறைந்த அளவு வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்துகின்றனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் பல லட்சம் பேர் தொழில்செய்து, கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள், தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் காத்திட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளைப் பின்பற்றி தகுந்த இடைவெளியுடன் தொழிற்சாலைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 50 விழுக்காட்டில் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைப்போல, திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 விழுக்காடு தளர்வுகளுடன் விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோயில், கிறிஸ்தவ ஆலயம், அதைப்போன்ற மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், தனியார் நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் நடத்த சிறப்பு அனுமதியளித்து, எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் என்ற சங்கத்தின் சார்பாக சுமார் 200-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.