கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக அரசு மருத்துவமனைகள் பரபரப்பாக செயல்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துமனையை, சுற்றுவட்டாரத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகிறனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் உடல் நிலை சரி இல்லாமல் கடந்த இரு நாட்களாக மருத்துமனையின் முன்பு தரையில் படுத்த படுக்கையாக உள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியினரும் மருத்துவமனை பணியாளர்களும் காளிமுத்துவை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில, மருத்துவமனை முன்பு கிடக்கும் இவரை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காட்டுத்தீயில் பெண் குழந்தைகள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு!