விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியில் ராமகிருஷ்ணன், வேளாங்கண்ணி ஆகிய இருவரும் விவசாயப் பணி செய்பவர்கள். கடந்த 2015ஆம் ஆண்டு இருவரும் பணி செய்துகொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக்கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை ராமகிருஷ்ணனின் தூண்டுதலால், வேளாங்கண்ணி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. முதல் குற்றவாளியான வேளாங்கண்ணி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு தூண்டியதால், ராமகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: பெண் குழந்தை கடத்தல் - சென்ட்ரலில் அதிர்ச்சி நிகழ்வு!