ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு: உடலை தர தாமதமாக்கியதால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்! - viruthunagar district news

விருதுநகர்: மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி உடலை தருவதற்கு தாமதாக்கிய மருத்துவர்களை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்
ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்
author img

By

Published : Sep 20, 2020, 1:49 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்- காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. தொடர்ந்து கடந்த வருடம் கர்ப்பம் தரித்த காளீஸ்வரி பிரசவத்திற்காக நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பிரசவம் நடைபெற்றதை தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் காளீஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து உடற்கூறாய்வுக்காக காளீஸ்வரி உடல் வைக்கப்பட்டது. கோட்டாட்சியர் முன்னிலையில் உடற்கூறாய்வு பரிசோதனை நடைபெற வேண்டும் என்ற நிலையில், மதுரை கோட்டாட்சியர் உடற்கூறாய்வு பரிசோதனையை ஞாயிற்றுக்கிழமை அன்று வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதன் பேரில் மதுரை மருத்துவர்கள் செப்.20ஆம் தேதி தான் காளீஸ்வரியின் உடல் கிடைக்கும் என உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இத்தகவல்களை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள காளிஸ்வரியின் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்ச் பாயிண்ட் என்ற நான்கு முக்கு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் சமாதானம் செய்தும் சமாதானத்தை ஏற்காத உறவினர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலால் நான்கு திசைகளிலும் 3 கிலோ மீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.